Read in English
This Article is From Jul 13, 2019

பெரம்பலூரில் ஹெச்வி பாசிடிவ் சிறுவனுக்கு பள்ளி பயில அனுமதி மறுப்பு

“மாணவரின் கல்வித்திறன் மோசமாக இருந்ததால்” அனுமதி மறுக்கப்பட்டதாக தலைமை ஆசிரியருக்கும் சிறுவனின் உறவினர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

Advertisement
தமிழ்நாடு Edited by

பெரம்பலூர் மாவட்டம் கோலக்நாதத்த்தில் உள்ள பள்ளியில் சேர புதன்கிழமை வரவைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. (Representational)

Tiruchirappalli :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் ஹெச்.ஐ.வி பாசிடிவ் உள்ள சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து தமிழக கல்வித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. சிறுவனுக்கு கல்வி மறுத்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளி கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அறிக்கை கோரியுள்ளதாக தெரிகிறது. 

பெரம்பலூர் மாவட்டம் கோலக்நாதத்த்தில் உள்ள பள்ளியில் சேர புதன்கிழமை வரவைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. 

பள்ளி கல்வி இயக்குநர் சிறுவனுக்கு ஏன் கல்வி மறுக்கப்பட்டது என்பதையும் பெற்றோருக்கும் பள்ளி தலைமை ஆசியரான கே. காமராஜுக்கு இடையிலான சந்திப்பின் போது என்ன நடந்தது என்பதை அறிய விரும்புவதாக தெரிகிறது. 

Advertisement

“மாணவரின் கல்வித்திறன் மோசமாக இருந்ததால்” அனுமதி மறுக்கப்பட்டதாக தலைமை ஆசிரியருக்கும் சிறுவனின் உறவினர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

காரணம் எதுவாக இருந்தாலும் தலைமை ஆசிரியர் சிறுவனுக்கு கல்வியை மறுக்க எந்தவொரு அதிகாரமும் இல்லையென்று கூறினார். 

Advertisement
Advertisement