This Article is From Jun 24, 2018

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018: தமிழக மாணவர்களுக்கு முதல் பரிசு

டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கு உதவியாக இருக்க கூடிய கருவியை கண்டறிந்த தமிழக மாணவர்களுக்கு முதல் பரிசி அளிக்கப்பட்டது

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018: தமிழக மாணவர்களுக்கு முதல் பரிசு
பிலானி, ஜூன் 23: 2018 ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் ஹார்டுவேர் எடிஷன் போட்டி தொடரில், டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கு உதவியாக இருக்க கூடிய கருவியை கண்டறிந்த தமிழக மாணவர்களுக்கு முதல் பரிசி அளிக்கப்பட்டது.

சென்னை கே.சி.ஜி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் எளிதாக எழுதவும், படிக்கவும், எழுத்துக்களை புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்க கூடிய கருவியை கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை பெற்றது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை டில்லி மற்றும் பெங்களூரு மாணவர்கள் பெற்றனர். விமான நிலையங்களில் தொடர்ந்து காணாமல் போகும் லக்கேஜ் பிரச்சனைகளுக்கு தீர்வாக புதிய கண்டிப்பிடிப்பை அறிமுகப்படுத்தினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் இரண்டாவது தேசிய அளவிலான தொழிநுட்ப போட்டியில், இளம் தலைமுறையினரின் ஆற்றலை வெளிக்கொண்டு வந்து, டிஜிட்டல் இந்தியா முன்னேற்றங்களில் ஈடுபட்டுள்ளது.

போட்டியின் முதல் கட்டமாக, 17 மாநில அரசுகள், 27 துறைகளில் இருந்து நாட்டில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை இணையதளத்தில் பகிர்ந்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, 1200க்கும் மேற்பட்ட உயர்நிலை படிப்புகளில் இருக்கும் மாணவ மாணவிகள் பிரச்சனைகளுக்காக தீர்வுகளை அனுப்பி இருந்தனர்.

இறுதி போட்டி நாட்டிலுள்ள 10 முக்கியம் மையங்களில் நடைப்பெற்றது. CSIR- CEERI, பிலானி, ஐஐடி கராக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐஎஸ்சி பெங்களூரு அகிய இடங்களில் நடைப்பெற்றது. மத்திய மனித வள துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் போட்டியாளர்களை வீடியோ கான்பரென்சிங் மூலம் சந்தித்தார்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திறமையான மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, போட்டியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஹாக்கதான் தொடரின் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 27 கண்டுபிடிப்புகள் சோதனை ஓட்டதிற்கு பிறகு, பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆண்டி இறுதி போட்டியில், 13 குழுக்கள் பங்கேற்றன. குறிப்பாக கொல்கத்தா குரு நானக் கல்லூரியில் மாணவர்கள் பேச்சுத்திறன் குறை கொண்டவர்களுக்கான சிறப்பு கையுறைகளை கண்டுபிடித்தனர். பேச்சுத்திறன் குறை உள்ளவர்கள் தங்களின் கை அசைவுகள் மூலம் ஒலி வடிவத்தை ஸ்மார்ட் போனில் கொண்டுவரலாம். இதன் மூலம் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு பயனாக அமையும்.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.