This Article is From Nov 20, 2019

JOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!!

முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது.

Advertisement
Jobs Edited by

விண்ணப்பங்கள் தபால் மூலம் Offiline -ல் அளிக்கப்படவேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

New Delhi:

தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியத் தொகை ரூ. 20,600 முதல் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13-ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தபால் மூலம் Offiline -ல் அளிக்கப்படவேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

விருப்பப்படுவோர் விண்ணப்பத்தை TNCSC  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் Attested செய்யப்பட்ட சான்றிதழ் Xerox, சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து,

The Managing Director, 
Tamil Nadu Civil Supplies Corporation, 
No.12, Thambusamy Road, 
Kilpauk, Chennai- 600010

Advertisement

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பங்களை டவுண்லோட் செய்ய... இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்..

Advertisement

Download TNCSC Assistant Application Form Here 

முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது. 

Advertisement

தமிழ்நாடு சிவில் சப்ளை கழகம் என்பது மாநில அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இது ரேஷன் கடைகள், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. 

Advertisement