New Delhi: புதுடில்லி: TNUSRB எனப்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில், காலி இடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. காலியாக உள்ள 202 காவல் துறை துணை ஆய்வாளர் (கை ரேகை நிபுணர்) இடங்களுக்கு பணியாட்களை தேர்ந்தெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதனை அடுத்து, 30% வேலைகள் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 70% இடங்கள் ஆண்களுக்கு அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். விண்ணப்த்திற்கான முன்பதிவு கட்டணம் 500 ரூபாய் ஆகும்.
B.Sc இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடம் படித்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் தமிழ் அல்லாது வேற்று மொழி பாடம் படித்தவர்கள், பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள் டி.என்.பி.எஸ்.இ நடத்தும் தமிழ் II தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம்
என்.சி.சி, என்.எஸ்.எஸ், விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு இறுதிகட்ட தேர்ச்சியின் போது சிறப்பு இடம் அளிக்கப்படும். தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளிக்க செப்டம்பர் 28 ஆம் தேதியே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில், பொது அறிவு, உளவியல், தகவல் தொடர்பு, தருக்க சிந்தனை, எண் அறிவு ஆகியவை குறித்த கேள்விகள் கேட்கப்படும்.