This Article is From Dec 26, 2019

நீதித்துறை, நிர்வாகத்திறனில் இந்திய அளவில் தமிழகத்திற்கு முதலிடம்!! மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய பணியாளர் நலத்துறை அளித்துள்ள தகவலின்படி, சத்தீஸ்கர் 4-வது இடத்திலும், ஆந்திரா 5-வது இடத்திலும், குஜராத் 6-வது இடத்திலும், அரியானா 7-வது இடத்திலும், கேரளா 8-வது இடத்திலும் உள்ளன.

நீதித்துறை, நிர்வாகத்திறனில் இந்திய அளவில் தமிழகத்திற்கு முதலிடம்!! மத்திய அரசு அறிவிப்பு!

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

நிர்வாகத் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும் உள்ளன. 

மத்திய பணியாளர் நலத்துறை அளித்துள்ள தகவலின்படி, சத்தீஸ்கர் 4-வது இடத்திலும், ஆந்திரா 5-வது இடத்திலும்,  குஜராத் 6-வது இடத்திலும், அரியானா 7-வது இடத்திலும், கேரளா 8-வது இடத்திலும் உள்ளன.

மத்திய பிரதேசம் 9-வது இடத்திலும், மேற்கு வங்கம் 10-வது இடத்திலும், தெலங்கானா 11-வது இடத்திலும், ராஜஸ்தான் (12 வது), பஞ்சாப் (13 வது), ஒரிசா (14 வது), பீகார் (15 வது), கோவா (16 வது), உத்தரபிரதேசம் (17 வது) மற்றும் ஜார்க்கண்ட் 18-வது இடத்திலும் உள்ளன. 

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மற்றும் மலை பிரிவில், இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில்  உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு-காஷ்மீர் (இப்போது ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது), மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

யூனியன் பிரதேசங்களை பொறுத்தளவில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சண்டிகர், டெல்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன. 

துறை வாரியாக பார்த்தால், வேளாண் துறையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகியவை பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. வடகிழக்கு மலை மாநிலங்களில் மிசோரமும், யூனியன் பிரதேசங்களில் டையூ டானும் முதலிடத்தில் உள்ளன. 

வர்த்தக துறையில் ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா முதல் மூன்று இடங்களிலும், வடகிக்கு மலை மாநிலங்களில் உத்தரகாண்ட் முதலிடத்திலும், யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடத்திலும் உள்ளன. 

மனித வளத்துறையில் பெரிய மாநிலங்களில் கோவாவும், மலை மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும், யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் முதலிடத்தில் உள்ளன. 

சுகாதார துறையில் பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. மலை மாநிலங்களில் மணிப்பூரும், யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் முதலிடத்தில் உள்ளன. 

பொது அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு வசதி துறையில் தமிழகம் பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் குஜராத், பஞ்சாப் உள்ளன. 

மலை மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகரும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன. 

பொருளாதா நிர்வாகத்தில் பெரிய மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, தெலங்கான, குஜராத், தமிழ்நாடு ஆகியவை உள்ளன. இந்த வகையில் மலை மாநிலங்களில் உத்தரகாண்ட் முதலிடத்திலும், யூனியன் பிரதேசங்களில் டெல்லியும் முதலிடத்தில் உள்ளன. 

சமூக நலத்துறையில் சட்டீஸ்கர் முதலிடத்திலும், மலை மாநிலங்களில் மேகாலயாவும், யூனியன் பிரதேசங்களில் டையூ, டாமனும் முதலித்தில் உள்ளன. 

நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அரியானா, ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

இந்த வகையில் இமாச்சல பிரதேசம் மலை மாநிலங்களிலும், புதுவை யூனியன் பிரதேசங்களிலும் முதலிடத்தில் உள்ளது. 

சுற்றுச் சூழல் துறையில் மேற்கு வங்கம் பெரிய மாநிலங்களில் முதலிடத்திலும், கேரளா, தமிழ்நாடு ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மலை மாநிலங்களில் முதலிடத்திலும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும் உள்ளன. 

.