This Article is From Oct 03, 2019

Viral Video : தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டியின் நடனமும் முகபாவனைகளும்

வீடியோவில் அழகான நடனத்துடன் அற்புதமான முக பாவனைகளுடன் கதகளி கலையை விவரிங்கும் பாங்குதான் வைரலாகியுள்ளது.

Viral Video : தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டியின் நடனமும் முகபாவனைகளும்

கிட்டத்தட்ட 4,000 பேருக்கு மேல் பார்த்துள்ளனர்

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டியின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது. வீடியோவில் அழகான நடனத்துடன் அற்புதமான முக பாவனைகளுடன் கதகளி கலையை விவரிங்கும் பாங்குதான் வைரலாகியுள்ளது. 

இந்த வீடியோவை செவ்வாயன்று ஐ.ஏ.எஸ் அதிகாரி  பிரியங்கா சுக்லா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பெற்றதாக தெரிவித்தார். சுற்றுலா வழிகாட்டியான பிரபு அடையாளம் காட்டப்பட்டார்.  சுற்றுலா பயணிகளின் குழுவினர்களும் அவரது நடிப்பை பாராட்டினார்கள்.  

வீடியோவில் சுற்றுலா வழிகாட்டி பிரபு, கதகளி நடனத்தின் ‘முத்திரைகள்' நடனத்தின் தோரணை குறித்து விளக்குகிறார். சுற்றுலா பயணிகளின் குழுவினரும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். 

ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரியங்கா சுக்லா ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி. மிகவும் திறமையானவர்” என்று குறிப்பிட்டு, வீடியோவை பகிர்ந்துள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன் வீடியோவை பகிர்ந்தவர். கிட்டத்தட்ட 4,000  பேருக்கு மேல் பார்த்துள்ளனர். பலரும் அவரின் திறமை குறித்து பாராட்டியுள்ளனர்

Click for more trending news


.