This Article is From Feb 17, 2020

விழுப்புரம் அருகே தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக்கொலை!

வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணைத் தவறாகப் பார்த்தாக காவல் துறையினர் விழுப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் கும்பல் தாக்குதலுக்கு உள்ளான சக்திவேல்.

ஹைலைட்ஸ்

  • A video shows the man sitting on the ground with hands and legs tied
  • Another man is seen hitting him as a mob surrounds them
  • Police say the incident took place over 150 km from Chennai
Chennai:

நாடு முழுவதும் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சக்திவேல் என்று அடையாளம் காணப்பட்ட நபர் இரு கைகளும் கால்களும் கட்டப்பட்டவாறு தரையில் அமர்ந்திருக்கிறார். கும்பலால் சூழப்பட்ட சக்திவேலை ஒருவர் தாக்குவதைக் காணலாம். சாலைக்கு அருகாமையில் இருசக்கர மோட்டார் வாகனம் ஒன்று கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணைத் தவறாகப் பார்த்துவிட்டதாகக் கூறியே இந்த தாக்குதல் நிகழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், தனியார் வயலில் இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்றபோது அவர் தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். 

இதேபோல், கொடூரமாகத் தாக்கப்பட்டு, இரத்த காயங்களுடன் இருப்பதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்ததாக காவல்துறையின் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சக்திவேலின் குடும்பத்தினரை எச்சரித்து, மருத்துவமனைக்குக் கூட அழைத்துச்செல்லாமல்அவர்களை வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் 
கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சக்திவேல் சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளார். 

“வயிற்று கோளாறு காரணமாக அவர் வயலில் இறங்கியிருக்கிறார். அந்த சமயத்தில் வாகனத்தில் எரிபொருளும் தீர்ந்துவிட்டிருந்தது. அவர் தலித் என்கிற காரணத்தினாலே குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்.” எனத் தாக்குதலுக்கு உள்ளான சக்திவேலின் சகோதரி உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தையொட்டி மூன்று பெண்கள் உட்பட ஏழு நபர்களை காவல்துறை கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாநில அரசு பாதிக்கப்பட்ட சக்திவேலின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கியிருக்கிறது. இவ்வாறாக இருக்க காவல்துறையினர் சாதிய ரீதியான கோணத்தினை நிராகரித்திருக்கின்றனர்.

மேலும், “சக்திவேல் தாக்கப்பட்டபோது அவரது சாதி குறித்துத் தாக்குதல் கும்பலுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் விசாரணை நடத்திவருகிறோம். இந்நிலையில் முதல் புகாரினை கட்சி ஒன்று பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு எதிராகக் கொடுத்திருக்கிறது.” என்று விழுப்புர மூத்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமார் என்.டி.டிவிக்கு தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக சக்திவேல் குறிப்பிட்ட வயது நிரம்பாத பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

எப்படியாயினும், சக்திவேல் மீது தாக்குதலை நடத்தியவர்கள் வன்னியர் சமூகத்தினை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சக்திவேல் தலித் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கிறார். பெரும்பாலும் இந்த இரு சமூகங்களுக்கிடையில் விரோதங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. 

“ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தலித் இளைஞர்கள், வன்னியர் சமூக பெண்களை மயக்குவதாக” பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அடிக்கடி பேசியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும், தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினருக்கு இடையேயான சாதி மறுப்பு திருமணங்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டினை கூறியிருந்தார்.

சாதியத்தினை உயர்திப்பிடிக்கும் அறிக்கைகளுக்கு மத்தியில் சாதி மறுப்பு திருமணங்கள் பெரும்பாலும் இறந்துதான் கிடக்கின்றன. தீண்டாமை மற்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் சட்ட விரோதமானது என்றாலும் பெரும்பாலான கிராமங்களில் இது பொதுவானதாகவே உள்ளது. 

திறந்த வெளியில் மலம் கழிக்கும் பிரச்சனை என்பது இந்தியாவிற்கு மிக முக்கிய சுகாதார பிரச்சனையாகும். அரசு இந்த விடயங்களில் மிக முக்கிய கவனம் செலுத்திவருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்துவிட்டோம் என்று அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.