This Article is From Jul 07, 2019

கவிதையோடு ரெடியாகிக்கோங்க :தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழையாம்

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல அடுக்கு மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

கவிதையோடு ரெடியாகிக்கோங்க :தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழையாம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மையத்தின் அறிக்கையில், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. 

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல அடுக்கு மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

.