This Article is From Aug 11, 2018

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

1.34 இலட்சம் கன அடிக்கு நீர்வரத்து இருந்ததால் மேட்டூர் அணை இன்று மதியம் இரண்டு மணியளவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Coimbatore:

கர்நாடக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியது. கடந்த ஜூலை 23இல் நிரம்பிய மேட்டூர் அணை, நடப்பாண்டில் தற்போது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

1.34 இலட்சம் கன அடிக்கு நீர்வரத்து இருந்ததால் மேட்டூர் அணை இன்று மதியம் இரண்டு மணியளவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து, மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 1.10 கன அடி அளவுக்கு இன்று நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

.