This Article is From May 23, 2019

தூத்துக்குடியில் தமிழிசையை பின்னுக்குத் தள்ளிய கனிமொழி..!

இந்தியா முழுவதும் பா.ஜ.க 327 இடங்களில் முன்னிலை பெற்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தூத்துக்குடியில் தமிழிசையை பின்னுக்குத் தள்ளிய கனிமொழி..!


மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. 

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 62821 வாக்குள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்  தமிழிசை சௌந்தராஜன்  21124 வாக்குகளையே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பா.ஜ.க 327 இடங்களில் முன்னிலை பெற்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கேரளாவிலும் பா.ஜ.க பின்னடைவயே சந்தித்து வருகிறது. 

.