This Article is From Feb 05, 2019

‘காமெடி… காமெடி…!’- ஸ்டாலினை வறுத்தெடுக்கும் தமிழிசை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் பங்கேற்று வரும் கிராம சபைக் கூட்டங்களில், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்.

‘காமெடி… காமெடி…!’- ஸ்டாலினை வறுத்தெடுக்கும் தமிழிசை

இதையொட்டி கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘ஸ்டாலின்தான் பெரிய காமெடியாக உள்ளார்’ என்று கூறியுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • கிராம சபைக் கூட்டங்களில் மோடியை விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்
  • இதற்குத்தான் தமிழிசை எதிர்வினை ஆற்றியுள்ளார்
  • இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் பங்கேற்று வரும் கிராம சபைக் கூட்டங்களில், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். இதையொட்டி கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘ஸ்டாலின்தான் பெரிய காமெடியாக உள்ளார்' என்று கூறியுள்ளார். 

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை, 'கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வது எல்லாம் காமெடியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர் மோடியையும், இடைக்கால பட்ஜெட்டையும் காமெடி என்று சொல்லி வருகிறார். 

ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொன்னது காமெடியாகத் தெரிகிறதா? வருமான வரி உச்சவரம்பு 5 லட்ச ரூபாயாக ஏற்றப்பட்டுள்ளது. அது காமெடியாக தெரிகிறதா?

ஆக, எல்லாவற்றையும் காமெடியாக மட்டுமே ஸ்டாலின் பார்த்து வருகிறார். மக்கள் எங்களை சீரியஸாகத்தான் நினைக்கிறார்கள். வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைப்போம்' என்று முடித்தார். 

 
 

.