This Article is From Sep 09, 2019

Tamilisai: தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்!

இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி, டிஜபி எம்.மஹேந்தர் ரெட்டி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tamilisai: தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்!

தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை

Hyderabad:

தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பதவியேற்று கொண்டார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி, டிஜபி எம்.மஹேந்தர் ரெட்டி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற பின், தனது தந்தை குமரி அனந்தன் மற்றும் தாய் காலில் விழுந்து தமிழிசை ஆசி பெற்றார்.
 
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.