This Article is From May 08, 2019

+1 ரிசல்ட், ரி-வேல்யூஷன், சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்!!

+1 Result: +1 தேர்வு முடிவு, சான்றிதழ் பெறுவது தொடர்பான விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisement
Education Written by

Tamil Nadu 11th Result: 14-ம்தேதி பிற்பகல் முதல் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

1. http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணைய தளங்களில் ரிசல்ட்டை அறிந்து கொள்ளலாம்

2. அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி ரிசல்ட்டை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

3. பள்ளியில் மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும். 

4. மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். 

Advertisement

5. அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

6. ஒரிஜினல் PDF சான்றிதழ்களை 16-ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். 

Advertisement

7.   +1-ல் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ம்தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும்.

8.  மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (Revalution) விண்ணப்பம் செய்யலாம். 

Advertisement

9.  விடைத்தாள் நகலைப் பெற பாடம் ஒன்றுக்கு ரூ. 275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

10.  ரி-வேல்யூஷனை பொறுத்தளவில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ. 305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை +1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே செலுத்தலாம். 

Advertisement