கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை பாதிப்பு
Rameswaram, Tamil Nadu: டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று 75000 மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டம் நடத்த உள்ளனர்.
“டீசல், பெட்ரோல் இரண்டும் ஜிஎஸ்டி விரிவிதிப்பின் கீழேயே கொண்டுவரப்பட வேண்டும். இதனால் ஓரளவு எரிபொருள் விலை குறையும். கடந்த ஒரு மாதமாக டீசல் வாங்க முடியாமல் மீன்பிடிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது” என்று தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பி. சேசுராஜ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறினார்.