This Article is From Aug 06, 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா எல்லையில் இருக்கும் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

.