This Article is From Feb 18, 2020

'திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்' - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.

'திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்' - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!!

முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களை எதிர் மனுதாரராக சேர்க்காததால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு போராட்டத்திற்கு பொருந்தாது என்றும், நாளை நடைபெறும் போராட்டம் தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாமல் நடைபெறும் என்றும் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக இஸ்லாமிய அமைப்புகளின் சட்ட மன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.. 

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர், சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றனர். 

சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இதுநடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் சட்டம் ஒழுங்கும் பாதிப்பு அடையும். எனவே இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதியக்கக் கூடாதென உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணனன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியளிக்கப்படாத போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி, மார்ச் 11-ம்தேதி வரையில் போராட்டம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

இந்த சூழலில் திட்டமிட்டபடி தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.