This Article is From Apr 19, 2019

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் அதிரடி

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் அதிரடி

தமிழகம், கர்நாடக உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும், தமிழகத்தில் மட்டும் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம்,

அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற டிவிட்டர் டிரெண்டிங் குறித்து உங்களின் கருத்து?

அவர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. நிச்சயம் அவர்களை ஏம்மாறிவிட மாட்டேன் என்றார்.

இந்தத் தேர்தலில் 71% சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறித்து உங்கள் கருத்து?

தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது சரியான ஒன்று தான். சென்னையில் தான் மிக குறைவுவாக 55% என வாக்குகள் பதிவாகியுள்ளன. 4 நாட்கள் விடுமுறையால் எல்லோரும் சொந்த ஊருக்கு சென்று விட்டார்களோ என்னவோ..

மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு உள்ளதா?

அவர் மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது வரும் மே.23ஆம் தேதி தெரியவரும்.

தேர்தலின்போது பல இடங்களில் வன்முறை நடந்துள்ளன. அது குறித்த உங்கள் கருத்து?

தேர்தல் நேரத்தில் முன்பு நடந்த வன்முறைகளுடன் ஒப்பிடும் போது இந்தமுறை மிகவும் குறைவு தான். தேர்தல் ஆணையம் நன்றாக செயல்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் உங்களை எப்போது எதிர்பார்க்கலாம்? இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகு, ஆட்சி மாற்றம் வந்தால் போட்டியிடுவீர்களா?

எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் நிச்சயம் போட்டியிடுவேன். தேர்தலை சந்திக்க தாயார் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

.