This Article is From Feb 12, 2019

''ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் எடப்பாடி பழனிசாமி'' - தமிழிசை பாராட்டு

தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட ஏழை மக்களுக்கான சிறப்பு நிதியுதவியை குறிப்பிட்டு தமிழிசை சவுந்தர ராஜன் ட்விட் செய்துள்ளார்.

''ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் எடப்பாடி பழனிசாமி'' - தமிழிசை பாராட்டு

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்
  • 60 லட்சம் குடும்பங்களுக்கு உதவித் தொகை
  • பாஜக தலைவர் பாராட்டால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் என்று எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பாராட்டியுள்ளார். 

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில், ''வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியதவி வழங்கப்படும். இதனால் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் பலன் பெறுவார்கள். இதற்கு முதல்கட்டமாக ரூ. 1200 கோடி முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். 

இதற்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார். 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கும் சூழலில் தமிழிசையின் பாராட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
 

.