This Article is From Jan 04, 2020

மீண்டும் 'மிஸ்டு கால்' பிரசாரத்தில் இறங்கிய தமிழக பாஜக!! இப்போது எதற்கு தெரியுமா?

கட்சியில் உறுப்பினராக சேர விரும்புவோருக்கு ஒரு எண்ணை குறிப்பிட்டிருந்த பாஜக அதற்கு மிஸ்டு கால் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அக்கட்சி தெரிவித்திருந்தது.

Advertisement
Tamil Nadu Written by

குடியுரிமை போராட்டத்திற்கு ஆதரவான பிரசாரங்களை தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

உறுப்பினர்கள் சேர்க்கைக்கு முன்பு மிஸ்டு கால் பிரசாரத்தை மேற்கொண்ட தமிழக பாஜக, மீண்டும் அதே முறையை கையில் எடுத்துள்ளது. இப்போது, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இதன்படி, குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிப்பவர்கள்  88662 88662 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என தமிழக பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. 

இதேபோன்று, #IndiaSupportCAA என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2014-ம் ஆண்டின்போது, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மிஸ்டு கால் பிரசாரத்தை பாஜக கொண்டு வந்தது. இதன்படி ஒரு குறிப்பிட்ட எண் பகிரப்பட்டு, கட்சியில் சேர விரும்புவோர் அதற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

இதன்படி மிஸ்டு கால் கொடுப்பவர்களுக்கு பாஜக தொழில்நுட்ப பிரிவில் இருந்து எஸ்.எம்.எஸ். ஒன்று வரும். அதில் முகவரியை நிரப்பி அனுப்பினால், பாஜக நிர்வாகிகள் வீடு தேடி வந்து உறுப்பினர் அட்டையை அளித்துச் செல்வார்கள்.

Advertisement

இந்த முறையில் லட்சக்கணக்கான தொண்டர்களை சேர்த்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தேர்தல்களில் அவர்கள் பெற்ற வாக்கு, இந்த மிஸ்டுகால் பிரசாரத்தை சர்ச்சைக்குள்ளாக்கியது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மீண்டும் மிஸ்டுகால் பிரசாரத்தை தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது. 

Advertisement