2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட் மீதான விவாதம் குறித்து வரும் 15 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்.
பட்ஜெட் லைவ் அப்டேட்ஸ்:
திருமண நிதி உதவி திட்டங்களுக்கு 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தமிழக பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக எரிசக்தி துறைக்கு ரூ. 18,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் இதர மின்நுகர்வோருக்கு மின் மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு 490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்காக ₹1,772 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைகு ரூ.476.26 கோடி ஒதுக்கீடு
ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூ.726.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
மீனம்பாக்கம் - வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன எனத் தகவல்
தொழில் துறையில் 3.50 லட்சம் கோடிகளை ஈர்ப்பதற்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்தணர்வு போடப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டால் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
2019 ஆம் ஆண்டின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், இந்திய அளவில் தமிழகம்தான் தொழில் துறையின் முன்னோடி என்று நிரூபித்துள்ளது- நிதி அமைச்சர்
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் அது சரிசெய்யப்படும் என நம்புகிறேன்- ஓபிஎஸ்
உணவு மானியத்துக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு
மாநிலத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக கட்டமைப்புக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்- நிதி அமைச்சர்
கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக இணையதளம் மூலம் விற்பனை செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது- ஓபிஎஸ்
தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
5 மாவட்டதலைநகரங்களில்பொறியியல்பட்டதாரிகளுக்குதிறன்வளர்ப்புப்பயிற்சிஅளிக்கப்படும் என அறிவிப்பு
வரும்நிதிஆண்டில், அரசின்நிதிப்பற்றாக்குறைரூ.14,315 கோடியாக ஆககுறையும்
மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தால், பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்- ஓபிஎஸ்
சென்னைமெட்ரோரயில்திட்டத்தின் 2 ஆம்கட்டத்தின்கீழ் 118.90 கிலோமீட்டர்நீளமுள்ள 3 மெட்ரோரயில்வழித்தடங்கள்அமைக்கப்படும்
இந்துசமயஅறநிலையத்துறைக்குநடப்பாண்டில் 281.86 கோடிரூபாய்நிதி
எரிபொருள் மானியம் உட்பட போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,297 கோடி நிதி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதிற்கு 1362.27 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
டாக்டர். முத்தலட்சும் மகப்பேறு திட்டத்திற்கு 959.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5890 கோடி செலவில் பனிரெண்டாயிரம் பி.எஸ்-6 ரக பேருந்துகள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்
விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு ரூ.168.27 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மகப்பேறு இறப்பை கட்டுப்படுத்துவதில் 2030 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இலக்கை, தமிழகம் முன்னரே எட்டியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்- ஓபிஎஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்: ஓபிஎஸ்
தமிழகத்தில் மொத்தம் 7,896 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருந்தன. தற்போது அது 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தகவல்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்க ரூ.460.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்துக்கு கடந்த 9 மாதங்களில் ரூ.31 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது எனத் தகவல்
10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 5,000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தனியார் பள்ளி மாணவர்களைவிட, தமிழக அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் திறன் வேகமாக வளர்ந்து வருகிறது என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலணி, பை மற்றும் இதர பொருட்களை வழங்குவதற்கு ரூ.1656.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு, 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு
இந்த நிதி ஆண்டில், 1,97,11 கோடி ரூபாயாக இருக்கும் என நிதி அமைச்சர் ஓபிஎஸ் தகவல்
கொடுங்கையூரில் கழிவுநீரை சுத்திகரிக்க 235 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன
2020 ஆம் ஆண்டு மார்ச் 31-ல், தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். இது கடந்தாண்டு ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது என் நிதி அமைச்சர் தகவல்
இந்த நிதியாண்டில் 20,000 பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். அதற்காக மட்டும் 420 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள நதிக் கரையில் அருகில் இருக்கும் மக்களுக்கு, 4647.50 கோடி ரூபாய் செலவில் 38,000 வீடுகள் அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
வட சென்னையில் அமைந்துள்ள நிறுவனங்களின் நீர் தேவைக்கு, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு 235 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு
ஊரக வளர்ச்சி: கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
மின்சாரத் துறைக்கு 18,560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
அடையாறு மற்றும் கூவம் நதிகளை மீட்டெடுப்பதற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையைச் சுற்றியுள்ள வனப் பகுதியை பராமரிக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஹார்வர்டு பல்கலையில் இருப்பதைப் போல பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்படும் என அறிவிப்பு
தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 1,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்கை மீட்டெடுத்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமல் செய்யப்படும்
அத்திக்கடவு - அவினாசித் திட்டம் விரைவில் தொடங்கப்படும்- நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி அமைக்கப்படும்.
காலை 10:50- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
காலை 10:50- உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584 கோடி ஒதுக்கப்படும்
காலை 10:50- 173.13 கோடி ரூபாய் மீன் வளத்துறைக்கு ஒதுக்கீடு
காலை 10:49- பால் வளத் துறைக்கு 258.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு
காலை 10:42- தேனி, சேலம் மற்றும் ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டத்துக்கு ரூ.1,125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காலை 10:42- அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு 47.7 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
காலை 10:41- திருமங்கலம், திருப்பரங்குன்றம், களிக்குடி வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என அறிவிப்பு
காலை 10:41- தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10:40 தமிழக தலைநகர் சென்னையில் 2000 கோடி ரூபாய் செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
காலை 10:40- கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த மாநில அரசு சார்பில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
காலை 10:39- மாணவர்கள் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.766 கோடி ஒதுக்கீடு
காலை 10:39- இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
காலை 10:39- விவசாயத் துறைக்கு 10,550 ரூபாய் கோடி ஒதுக்கீடு
காலை 10:38- சிறுபான்மையினர் நலத்துறைக்கு 14.99 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
காலை 10:38- மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3,000 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
காலை 10:38- மீன்வளத் துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு
காலை 10:37- உள்ளாட்சித் துறைக்கு ரூ.18,278 கோடி ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பி.எஸ் தகவல்
காலை 10:37- சிறைத்துறைக்கு 319 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
காலை 10:37- காவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதற்கு தேர்வுகள் நடத்தப்படும்.
காலை 10:36- திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பயன்பாட்டு வரும்
காலை 10:35- தமிழ் வளர்ச்சித் துறைக்கு 54.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
காலை 10:30- ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்
காலை 10:20- விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு
காலை 10:10- தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்