This Article is From Feb 08, 2019

தமிழக பட்ஜெட் 2019-20: அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி #LiveUpdates

2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட் மீதான விவாதம் குறித்து வரும் 15 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்.

பட்ஜெட் லைவ் அப்டேட்ஸ்:

Feb 08, 2019 12:38 (IST)
திருமண நிதி உதவி திட்டங்களுக்கு 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Feb 08, 2019 12:30 (IST)
தமிழக பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக எரிசக்தி துறைக்கு ரூ. 18,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Feb 08, 2019 12:27 (IST)
விவசாயிகள் மற்றும் இதர மின்நுகர்வோருக்கு மின் மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Feb 08, 2019 12:26 (IST)
விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு 490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Feb 08, 2019 12:24 (IST)

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்காக ₹1,772 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
Advertisement
Feb 08, 2019 12:09 (IST)
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைகு ரூ.476.26 கோடி ஒதுக்கீடு
Feb 08, 2019 12:07 (IST)
ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூ.726.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
Feb 08, 2019 12:01 (IST)
மீனம்பாக்கம் - வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன எனத் தகவல்
Feb 08, 2019 12:00 (IST)
தொழில் துறையில் 3.50 லட்சம் கோடிகளை ஈர்ப்பதற்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்தணர்வு போடப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டால் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
Feb 08, 2019 12:00 (IST)
2019 ஆம் ஆண்டின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், இந்திய அளவில் தமிழகம்தான் தொழில் துறையின் முன்னோடி என்று நிரூபித்துள்ளது- நிதி அமைச்சர்
Feb 08, 2019 11:58 (IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் அது சரிசெய்யப்படும் என நம்புகிறேன்- ஓபிஎஸ்
Feb 08, 2019 11:58 (IST)
உணவு மானியத்துக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு
Feb 08, 2019 11:57 (IST)
மாநிலத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக கட்டமைப்புக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்- நிதி அமைச்சர்
Feb 08, 2019 11:55 (IST)
கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக இணையதளம் மூலம் விற்பனை செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது- ஓபிஎஸ்
Feb 08, 2019 11:54 (IST)
தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Feb 08, 2019 11:54 (IST)

5 மாவட்டதலைநகரங்களில்பொறியியல்பட்டதாரிகளுக்குதிறன்வளர்ப்புப்பயிற்சிஅளிக்கப்படும் என அறிவிப்பு

Feb 08, 2019 11:52 (IST)

வரும்நிதிஆண்டில், அரசின்நிதிப்பற்றாக்குறைரூ.14,315 கோடியாக à®†à®•à®•à¯à®±à¯ˆà®¯à¯à®®à¯

Feb 08, 2019 11:49 (IST)

மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தால், பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்- ஓபிஎஸ்

Feb 08, 2019 11:48 (IST)

சென்னைமெட்ரோரயில்திட்டத்தின் 2 ஆம்கட்டத்தின்கீழ் 118.90 கிலோமீட்டர்நீளமுள்ள 3 மெட்ரோரயில்வழித்தடங்கள்அமைக்கப்படும்

Feb 08, 2019 11:47 (IST)

இந்துசமயஅறநிலையத்துறைக்குநடப்பாண்டில் 281.86 கோடிரூபாய்நிதி




Advertisement