தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
Tamilnadu Budget 2020: தமிழகத்தின் 2020 - 2021 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அது குறித்தான ஹைலைட்ஸ் இதோ:
4997 மீன்பிடி விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். விழுப்புரம் - அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு - ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடியிலும் நாகை ஆர்காட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்
ஆவின் கொள்முதல் அதிகரிப்பு!
2010-11 ல் நாளொன்றிற்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் 2019-2020 ல் 33.96 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன - நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்
தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70% மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - ஓபிஎஸ்
உணவுப் புங்காக்கள் பற்றி அறிவிப்பு!
தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்களும், திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்களும் நிறுவப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு
விபத்துகளில் காயமடைந்த, ஊனமுற்ற மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 2020-2021 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது- ஓபிஎஸ்
ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் 585 நியாய விலை கடைகளை பொங்கல் பரிசு வழங்குவதற்கு அரசு வழி வகை செய்துள்ளது. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் ஓபிஎஸ்
வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்!
திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என அறிவிப்பு
காவல் துறைக்கான ஒதுக்கீடு!
காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறைக்கான ஒதுக்கீடு!
உயர்கல்வி துறைக்கு ரூ.5542 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நுண்ணீர் பாசனம் பற்றிய அறிவிப்பு!
வரும் 2020-2021 ம் ஆண்டில் ரூ.1844.97 கோடி மதிப்பில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசதி பெறும். தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 2020-2021 ம் ஆண்டில் 325 மெ.டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் அறிவிப்பு
தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு!பேரிடர் மேலாண்மை - ரூ. 1,360.11 கோடி
தமிழ் வளர்ச்சித் துறைக்கு - ரூ. 74.08 கோடி
நீதி நிர்வாகம் - ரூ. 1,403.17 கோடி
சிறைச்சாலைகள் துறைக்கு - ரூ. 393.74 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கு - ரூ.403.68 கோடி
மீன்வளத் துறைக்கு - ரூ.1229.85 கோடி
ஆகிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவுடன் ஒப்பிட்டு பட்ஜெட் உரை!
2018 - 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 8.17 சதவிகிதத்தில் வளர்ந்தது. 2019 - 2020 ஆண்டில் 7.27 சதவிகிதமாக வளரும் என்று கணிக்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியான 5 சதவிகிதத்தைவிட அதிகமாகும். 2020 - 21 நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் - பட்ஜெட்ட்டின் போது பன்னீர்செல்வம்!
ஊரக வளர்ச்சித் துறைக்கு நிதி ஒதுக்கீடு!
தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு 23,161 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்
சத்துணவுத் திட்டத்திற்கான நிதி பற்றி அறிவிப்பு!
பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு 1,863 கோடி ரூபாந் நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
மகப்பேறு உதவித் திட்டம் பற்றி அறிவிப்பு!
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 959.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவிப்பு
அம்மா உணவகத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
அம்மா உணவகம் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
மடிக்கணினி வழங்கம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
பள்ளிகளில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - பட்ஜெட்டில் தகவல்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு!
கல்வி நிதி ஒதுக்கீடு!
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி வசதிக்காக 302.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு
நிர்பயா நிதி ஒதுக்கீடு!
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்
பேருந்துகளில் இனி கண்காணிப்பு கேமரா!
அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் - நிதி அமைச்சர் ஓபிஎஸ்
கீழடி அருங்காட்சியத்துக்கு நிதி ஒதுக்கீடு!
கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தின் கடன்!
2020-21 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் - பட்ஜெட்டில் பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழக பொருளாதார வளர்ச்சி!
2019- 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பீடு: நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்
நெல்சாகுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு!
திருந்திய நெல்சாகுபடி முறை சுமார் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழக வருவாய் மற்றும செலவு!
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும் செலவும், 2,41,601 கோடி ரூபாய் எனவும், இதனால் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும் தெரிவித்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
உணவு மானியம்!
உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தகவல்
தமிழக பட்ஜெட் தாக்கல்!
தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்