This Article is From Feb 08, 2019

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது: முழு விவரம்

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அதிகபட்சம் ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

ரயில் கட்டணம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Highlights

  • கட்டணத்தை குறைக்க பயணிகள் வலியுறுத்தி வந்தனர்
  • அதிகபட்சமாக ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது
  • நேற்றிரவு கட்டண குறைப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது

பயணிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ. 10-யை குறைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு அதில் 35 கி.மீ. தூர பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை 23 கிலோ மீட்டரும், சென்ட்ரல் - பரங்கிமலை 22 கிலோ மீட்டரும் ஆகும். 

இதில் குறைந்தது ரூ. 10 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது அதிகம் என பயணிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கட்டணம் சற்று குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரம்-

விமான நிலையத்திலிருந்து...

Advertisement

மீனம்பாக்கம் - ரூ. 10

நங்கநல்லூர் - ரூ. 20

Advertisement

ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை - ரூ. 40

டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்ட்ரல்  - ரூ. 50

Advertisement

உயர் நிதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 60

ஈக்காட்டுத் தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 40

Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு - ரூ. 50

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் - ரூ. 60

Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து....

விமான நிலையம் - ரூ. 50

மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலைம, சைதாப்பேட்டை - ரூ. 40

நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல் - ரூ. 40

உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 50

ஈக்காட்டுத்தாங்கல் - ரூ. 40

அசோக் நகர் ரூ. 30

வட பழனி - ரூ. 20

அரும்பாக்கம் - ரூ.10

கோயம்பேடு - ரூ. 10

திருமங்கலம், அண்ணா நகர் டவர் -ரூ. 20

அண்ணாநகர் கிழக்கு - ரூ.30

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை - ரூ.40

எழும்பூரில் இருந்து...

விமானநிலையம் - ரூ.50

மீனம்பாக்கம் - ரூ.60

நங்கநல்லூர் ரோடு - ரூ.50

ஆலந்தூர், கிண்டி - ரூ.50

சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். - ரூ.40

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. - ரூ.30

அரசினர் தோட்டம் - ரூ.20

சென்ட்ரல் - ரூ.10

உயர் நீதிமன்றம், மண்ணடி - ரூ.20

வண்ணாரப்பேட்டை - ரூ.30

ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் - ரூ.50

வடபழனி - ரூ.40

அரும்பாக்கம் - ரூ.40

கோயம்பேடு, திருமங்கலம் - ரூ.40

அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு - ரூ.30

ஷெனாய் நகர் - ரூ.20

பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் - ரூ.10

பரங்கிமலை - ரூ.50

சென்ட்ரலில் இருந்து...

விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் - ரூ.50

கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை - ரூ.40

டி.எம்.எஸ். - ரூ.30

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. - ரூ.20

அரசினர் தோட்டம் - ரூ.10

உயர் நீதிமன்றம் - ரூ.10

மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ.20

ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ.50

கோயம்பேடு பஸ் நிலையம் - ரூ.40

திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு - ரூ.40

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி - ரூ.30

கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா - ரூ.20

எழும்பூர் - ரூ. 10

பரங்கிமலை - ரூ.40

Advertisement