தேர்வு முடிவுகள் 24-ம்தேதி வெளியாகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது.
இதேபோன்று புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று மாலை 6 மணி வரையில்வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தின் நாங்குநேரி தொகுதியில் 52.18 சதவீதமும், விக்கிரவாண்டியில் 65.79 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரியின் காமராஜர் தொகுதியில் 56.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவையொட்டி நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்தன.
நாங்குநேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், அதிமுக தரப்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜ நாராயணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தி, அதிமுக தரப்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக கந்தசாமி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர்.
இன்று பதிவாகும் வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.