This Article is From Oct 25, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி!! தொண்டர்கள் உற்சாகம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் 14-ம்தேதி மறைந்தார். இதையடுத்து அங்கு கடந்த 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் 14-ம்தேதி மறைந்தார். இதையடுத்து அங்கு கடந்த 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செல்வன், திமுக தரப்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி உள்பட 12 பேர்  போட்டியிட்டனர். இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 

Advertisement

இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் புகழேந்தியை விட 44 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த தேர்தலில் மொத்தம் 1,13,428 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

இதேபோன்று நாங்குநேரி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

Advertisement

இடைத்தேர்தல் வெற்றியை அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement