This Article is From Dec 21, 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 24ந் தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 24ந் தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், இரண்டு மாதத்தில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை பற்றி கொள்கை முடிவு எடுக்க எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.