This Article is From Aug 16, 2019

வண்ணக்கயிறு விவகாரம் : ''தெளிவான நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டும்'' - டிடிவி தினகரன்!!

பள்ளிகளில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் வண்ணக் கயிறுகளை அணிந்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

மாணவர்கள் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணக் கயிறுகள் அணிவதாக கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தின் தென் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர், தங்களது சாதியை குறிக்கும் வகையில் கையில் வண்ண கயிறுகள், ரப்பர் பேண்டுகள் உள்ளிட்டவற்றை அணிகின்றனர். இது மோதலை ஏற்படுத்தக் கூடும் என புகார்கள் எழுந்தன. 

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த நிலையில் வண்ணக் கயிறு விவகாரம் தொடர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

Advertisement

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வருவது தொடர்பான விவகாரத்தில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. 

சாதிய அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் வண்ணப்பட்டைகளைக் கட்டிக் கொண்டு பள்ளிக்கு வருவதைத் தடுக்க வேண்டியது அவசியமானதுதான்.

Advertisement

அதேநேரத்தில் இறை நம்பிக்கையுடன் தொன்று தொட்டு கைகளில் கட்டப்படும் கயிறுகளுக்கும், நெற்றியில் திருநீறு, குங்குமம் உட்பட திலகங்கள் இடுவதற்கும் தடை விதிப்பது மத நம்பிக்கைகளில் தலையிடுவதாகும். எனவே, இப்பிரச்சனையில் பழனிசாமி அரசு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு டிடிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement