This Article is From May 05, 2020

எல்லையில் நடந்த சண்டையில் தமிழக வீரர் உயிரிழப்பு! முதல்வர் பழனிசாமி இரங்கல்

உயிரிழந்த சந்திர சேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் என்ற பகுதியை சேர்ந்தவர். அவரது மறைவால் மூன்று வாய்க்கால் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரின்போது துணை ராணுவ வீரரான தமிழகத்தை சந்திரசேகர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த சந்திர சேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் என்ற பகுதியை சேர்ந்தவர். அவரது மறைவால் மூன்று வாய்க்கால் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீர மரணம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!' என்று கூறியுள்ளார்.

Advertisement

முன்னதாக, குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். 

Advertisement