This Article is From Mar 04, 2019

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11-ம்தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

சிறப்பு நிதியுதவி வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

Highlights

  • ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
  • 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெறுவார்கள்
  • ரூ. 2 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11-ம்தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார். 

அதன்படி இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களையும் சேர்த்து மொத்தம் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடைவார்கள். ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

Advertisement

திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக பெரம்பலூரை சேர்ந்த மனிஷா என்கிற திருநங்கை உள்பட 32 குடும்பங்களுக்கு சிறப்பு நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
 

Advertisement