This Article is From Jun 05, 2020

கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்! தமிழகத்தில் ஒரே நாளில் 1,438 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு  ஆயிரத்தை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா கண்டறியும் சோதனை கட்டணம் ரூ. 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்! தமிழகத்தில் ஒரே நாளில் 1,438 பேருக்கு பாதிப்பு

இன்று மட்டும் 861 பேர் சிகிச்சை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது
  • தொடர்ந்து 6-வது நாளாக 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு
  • சென்னையில் பாதிப்பு குறையாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பாதிப்பில் தமிழகம் இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 256-ல் இருந்து 28 ஆயிரத்து 694 ஆக உயர்ந்திருக்கிறது. 

குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 86 பேருக்கும், காஞ்சிரபுத்தில் 15 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு  ஆயிரத்தை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா கண்டறியும் சோதனை கட்டணம் ரூ. 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் 861 பேர் சிகிச்சை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  குணம அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த  தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.  

.