இன்று 4 பேர் உள்பட மொத்தம் 44 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
- பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது
- 13,254 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று பாதிக்கப்பட்ட 526 பேரில் 360 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்த அளவில் தமிழ்நாட்டில் 4,495 ஆண்கள், 2,038 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
13,254 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன. இது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 2,29,670 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 37 அரசு மற்றும் 16 தனியார் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
219 பேர் குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,824 ஆக அதிகரித்திருக்கிறது.
இன்று 4 பேர் உள்பட மொத்தம் 44 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து ஒட்டுமொத்தமாக 4,664 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.