தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று உச்சம் அடைந்தது.
தமிழகத்தில் சென்னையைப் போன்று மற்ற தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்ப கணிசமாக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில், இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழக அளவில் மொத்தம் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,236 பேர் பாதிப்பு குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய பாதிப்பால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக தற்போது 3 ஆயிரத்தை தாண்டி ஒரே நாளில் 3,509 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்
Sl. No | மாவட்டம் | மொத்த பாதிப்பு | டிஸ்சார்ஜ் | சிகிச்சை பெறுவோர் | மரணம் |
1 | அரியலூர் | 450 | 391 | 59 | 0 |
2 | செங்கல்பட்டு | 4,407 | 2,355 | 1,986 | 65 |
3 | சென்னை | 47,650 | 27,986 | 18,969 | 694 |
4 | கோவை | 347 | 175 | 170 | 1 |
5 | கடலூர் | 912 | 530 | 377 | 5 |
6 | தர்மபுரி | 47 | 19 | 28 | 0 |
7 | திண்டுக்கல் | 377 | 244 | 129 | 4 |
8 | ஈரோடு | 96 | 72 | 22 | 2 |
9 | கள்ளக்குறிச்சி | 470 | 325 | 144 | 1 |
10 | காஞ்சிபுரம் | 1,488 | 679 | 792 | 17 |
11 | கன்னியாகுமரி | 255 | 118 | 136 | 1 |
12 | கரூர் | 133 | 90 | 43 | 0 |
13 | கிருஷ்ணகிரி | 73 | 32 | 39 | 2 |
14 | மதுரை | 1,279 | 448 | 820 | 11 |
15 | நாகை | 234 | 73 | 161 | 0 |
16 | நாமக்கல் | 90 | 86 | 3 | 1 |
17 | நீலகிரி | 50 | 21 | 29 | 0 |
18 | பெரம்பலூர் | 167 | 146 | 21 | 0 |
19 | புதுக்கோட்டை | 102 | 38 | 62 | 2 |
20 | ராமநாதபுரம் | 474 | 156 | 314 | 4 |
21 | ராணிப்பேட்டை | 567 | 302 | 263 | 2 |
22 | சேலம் | 494 | 221 | 271 | 2 |
23 | சிவகங்கை | 135 | 61 | 73 | 1 |
24 | தென்காசி | 286 | 110 | 176 | 0 |
25 | தஞ்சை | 357 | 153 | 203 | 1 |
26 | தேனி | 437 | 134 | 301 | 2 |
27 | திருப்பத்தூர் | 101 | 44 | 57 | 0 |
28 | திருவள்ளூர் | 3,085 | 1,874 | 1,160 | 51$ |
29 | திருவண்ணாமலை | 1,428 | 564 | 854 | 10 |
30 | திருவாரூர் | 277 | 121 | 156 | 0 |
31 | தூத்துக்குடி | 756 | 495 | 257 | 4 |
32 | நெல்லை | 689 | 441 | 243 | 5 |
33 | திருப்பூர் | 128 | 116 | 12 | 0 |
34 | திருச்சி | 461 | 224 | 233 | 4 |
35 | வேலூர் | 750 | 168 | 579 | 3 |
36 | விழுப்புரம் | 695 | 433 | 250 | 12 |
37 | விருதுநகர் | 283 | 153 | 127 | 3 |
38 | சர்வதேச விமான நிலைய கண்காணிப்பு | 328 | 135 | 192 | 1 |
39 | உள்நாட்டு விமான நிலைய கண்காணிப்பு | 217 | 65 | 152 | 0 |
40 | ரயில்வே கண்காணிப்பு | 402 | 201 | 201 | 0 |
மொத்த பாதிப்பு | 70,977 | 39,999 | 30,064 | 911 |