This Article is From May 29, 2020

தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ் 8,676; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 10,548 - மாவட்ட வாரியாக விவரம்!`

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,372 பேரில் 10,548 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ் 8,676; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 10,548 - மாவட்ட வாரியாக விவரம்!`

திருப்பூர், பெரம்பலூர், நீலகிரி, நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • தமிழகத்தின் 5 மாவட்டங்கள் கொரோனா பிடியிலிருந்து விலகியுள்ளன
  • மேற்கு மாவட்டங்களில் குறைவான கொரோனா பாதிப்பே உள்ளது

தமிழகத்தில் நேற்று 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 559 பேர். ஒட்டுமொத்த அளவில் 19,372 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 639 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 10,548 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,676 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 145 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (28-05-2020):

அரியலூர் - 362

செங்கல்பட்டு - 933

சென்னை - 12,762

கோவை - 146

கடலூர் - 443

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 138

ஈரோடு - 71

கள்ளக்குறிச்சி - 223

காஞ்சிபுரம் - 349

கன்னியாகுமரி - 59

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 26

மதுரை - 249

நாகை - 54

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 22

ராமநாதபுரம் - 65

ராணிப்பேட்டை - 97

சேலம் - 107

சிவகங்கை - 31

தென்காசி - 85

தஞ்சை - 86

தேனி - 108

நெல்லை - 330

திருப்பத்தூர் - 32

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 863

திருவண்ணாமலை - 304

திருவாரூர் - 42

திருச்சி - 79

தூத்துக்குடி - 198

வேலூர் - 42

விழுப்புரம் - 342

விருதுநகர் - 119

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 86

உள்ளூர் விமானங்கள் மூலம் வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 4

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 83

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (28-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 403

சென்னை - 6,304

கோவை - 144

கடலூர் - 416

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 112

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 99

காஞ்சிபுரம் - 204

கன்னியாகுமரி - 27

கரூர் - 73

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 153

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 36

ராணிப்பேட்டை - 80

சேலம் - 40

சிவகங்கை - 27

தென்காசி - 56

தஞ்சை - 71

தேனி - 77

நெல்லை - 155

திருப்பத்தூர் - 28

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 514

திருவண்ணாமலை - 92

திருவாரூர் - 33

திருச்சி - 69

தூத்துக்குடி - 86

வேலூர் - 33

விழுப்புரம் - 305

விருதுநகர் - 50

விமான நிலையம் - 8

ரயில் நிலையம் - 2

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,372 பேரில் 10,548 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், பெரம்பலூர், நீலகிரி, நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 


 

.