உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜுகளை தவிர்த்து, 10,680 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 94 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 644 பேர் ஆண்கள், 447 பேர் பெண்கள் ஆவர்.
ஒட்டுமொத்த பாதிப்பில் 15,394 பேர் ஆண்கள், 9,179 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் திருநங்கைகள் ஆவர்.
இன்று மட்டும் 536 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 706 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்திருக்கிறது.
உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜுகளை தவிர்த்து, 10,680 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இன்று ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 806 பேர் சென்னையையும், 82 பேர் செங்கல்பட்டையும், 15 பேர் காஞ்சிபுரத்தையும், 43 பேர் திருவள்ளூரையும் சேர்ந்தவர்கள். முன்னதாக இந்த 4 மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.