This Article is From Jun 04, 2020

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது

உயிரிழந்தவர்கள்,  குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 12,132 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள் ஆவர். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை தவிர்த்து அதிகபட்சமாக செங்கல்பட்டில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 44 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

Advertisement

தற்போது வரையில் தமிழகத்தில் 27 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 220 ஆக அதிகரித்திருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நோய் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

உயிரிழந்தவர்கள்,  குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 12,132 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

பரிசோதனை  மையங்களும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது 44 அரசு மற்றும் 30 தனியார் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் செயல்படுகிறது. 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

Advertisement