பலியானவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து 15,413 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு
- ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூரில் பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளனர்.
புதிய உயர்வால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 941 பேர் ஆண்கள், 621 பேர் பெண்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17,527 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் என மொத்தம் 77 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்காக செயல்பட்டு வருகின்றன.
பலியானவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து 15,413 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இன்றைய பாதிப்பில் 1,149 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்தம் 22,136 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இன்று சென்னையை தவிர்த்து, செங்கல்பட்டில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 18 பேரும், திருவள்ளூரில் 57 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் இன்று 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.