This Article is From Jun 10, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்குகிறது

இன்றைய மொத்த பாதிப்பில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,390 பேர் ஆவார்கள். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 182 பேர், திருவள்ளூரில் 105 பேர், காஞ்சிபுரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்குகிறது

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • சென்னையில் மட்டும் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
  • கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,675 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

இன்று மட்டும் 1,008 பேர் குணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து  333 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மற்றும் 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய மொத்த பாதிப்பில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,390 பேர் ஆவார்கள். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 182 பேர், திருவள்ளூரில் 105 பேர், காஞ்சிபுரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டு 80 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், கொரோனா தீவிரம் குறையவில்லை. இன்னும் ஜூலை, ஆகஸ்டில் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.