பலியானவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து, 18 ஆயிரத்து 281 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 1,477 பேர் உள்பட தமிழகத்தில் ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.3 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.9 சதவீதமாகவும் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 889 பேரிடமிருந்து 18 ஆயிரத்து 231 மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,186 பேர் ஆண்கள், 796 பேர் பெண்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,342 பேர் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 22 ஆயிரத்து 47 பேர் குணம் அடைந்துள்ளார்கள்.
தனியார் மருத்துவமனையில் 8 பேர், அரசு மருத்துவமனையில் 10 பேர் என ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்திருக்கிறது.
பலியானவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து, 18 ஆயிரத்து 281 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருககும், காஞ்சிபுரத்தில் 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.