This Article is From Jun 15, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு!!

சென்னையை தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டில் 120 பேரும், காஞ்சிபுரத்தில் 39 பேரும், மதுரையில் 33 பேரும், திருவள்ளூரில் 50 பேரும், ராணிப்பேட்டையில் 34 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு!!

உயிரிழந்தவர்கள், சிகிச்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து மொத்தம் 20 ஆயிரத்து 678 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 - ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 - ஆகவும் உயர்ந்துள்ளது. 

இன்று உயிரிழந்த 44 பேரையும் சேர்த்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று உயிரிழந்தவர்களில் 12 பேர் தனியார் மற்றும் 32 பேர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். 

.