உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களை தவிர்த்து தமிழகத்தில் மொத்தம் 7,270 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
- மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்வு
- கொரோனா பாதிப்புக்கு இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
இன்று பாதிக்கப்பட்ட 536 பேரில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இன்று மட்டும் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஏற்பட்ட 364 பேர் பாதிப்பை தொடர்ந்து இங்கு தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்திருக்கிறது.
உயிரிழப்பு விகிதத்தை பொறுத்தளவில் மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் மிகக்குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 0.68 சதவீதமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களை தவிர்த்து தமிழகத்தில் மொத்தம் 7,270 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.