இன்று 5 பேர் உள்பட தமிழகத்தில் இதுவரையில் 103 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 759 பேரில் 624 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்திருக்கிறது.
363 பேர் இன்று கொரோனா தொற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை7,491 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5 பேர் உள்பட தமிழகத்தில் இதுவரையில் 103 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 710 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 24 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும், 6 பேர் ராஜஸ்தானில் இருந்தும், 3 பேர் மேற்கு வங்கத்தில் இருந்தும், 5 பேர் பிலிப்பைன்சில் இருந்தும், 7 பேர் லண்டனில் இருந்தும் தமிழகம் வந்தவர்கள்.
இன்று மட்டுட்ம 12,155 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவை கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 41 அரசு மற்றும் 27 தனியார் என 68 ஆய்வகங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.