This Article is From May 27, 2020

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் 567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 9,909 பேருக்கு கொரோனா குணம் அடைந்திருக்கிறது. உயிரிழப்பு, டிஸ்சார்ஜ் தவிர்த்து தற்போது தமிழகத்தில் 8,500 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய பாதிப்பில் 678 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 508 பேர் ஆண்கள், 309 பேர் பெண்கள் ஆவர். 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 18 ஆயிரத்து 545 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 11,725 பேர் ஆண்கள், 6,815 பேர் பெண்கள், 5 பேர் திருநங்கைகள் ஆவர்.

கொரோனா பரிசோதனை மையங்களும் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 42 அரசு மற்றும் 28 தனியார் என மொத்தம் 70 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்திருக்கிறது. 

இன்றைய பாதிப்பில் 558 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தற்போது வரை சென்னையில் 12,203 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையை தவிர்த்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என சென்னையின் சுற்று வட்டார மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. 

.