கோயம்பத்தூர் மாவட்டத்தில் 392 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 344 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.49 லட்சத்தினைக் கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,025 மாதிரிகளில் 5,709 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 20வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,850 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,89,787 ஆக அதிகரித்துள்ளது. இன்று 121 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 16வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,007 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,860 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,182 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,19,059 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 489 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து , கோயம்பத்தூர் மாவட்டத்தில் 392 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 344 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது.