This Article is From Jun 15, 2020

ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு! சென்னையில் எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு - அனுமதி?

ஜூன் 21, 28 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழுமையான பொது முடக்கம் கடைபிடிக்கப்படும். அந்த 2 நாட்களில் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துகடைகள், மருத்துவமனை ஊர்திகள், ஆம்புலன்ஸ் சேவையை தவிர்த்து மற்ற எதற்கும் அனுமதி கிடையாது. இதற்காக தனியார் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு! சென்னையில் எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு - அனுமதி?

காய்கறி, மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் சமூக இடைவெளியுடன் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதியில்லை.
  • ஜூன் 19-ம் தேதியான வெள்ளி முதல் மீண்டும் 12 நாட்களுக்கு பொது முடக்கம்
  • உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி. டீக்கடைகள் இயங்காது.

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 12 நாட்களுக்கு பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த12 நாட்களில் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்-

• மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் தொடரும்.

• வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதியில்லை. அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்.

• கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zones) வசிக்கும் அரசு பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.

• ஏ.டி.எம். செயல்படும்.  வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன், ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதி.

• ரேஷன் கடைகள் காலை 8 – மதியம் 2 மணி வரை செயல்படும்.

• கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் செயல்படாது.

• காய்கறி, மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் சமூக இடைவெளியுடன் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி. இந்த நேரத்தில் நடமாடும் காய்கறி, பழக்கடைகளை நடத்திக் கொள்ளலாம்.

• உணவகங்களில் காலை 6 முதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. டீக்கடைகள் இயங்காது.

• முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

• அம்மா உணவகங்கள், உள்ளாட்சி அமைப்புகளால் சமையல் கூடங்கள் செயல்படும்.

• சரக்கு போக்குவரத்து, அத்தியவாசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இயங்கலாம்.

• இந்த 12 நாட்களில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

• ஜூன் 21, 28 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழுமையான பொது முடக்கம் கடைபிடிக்கப்படும். அந்த 2 நாட்களில் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துகடைகள், மருத்துவமனை ஊர்திகள், ஆம்புலன்ஸ் சேவையை தவிர்த்து மற்ற எதற்கும் அனுமதி கிடையாது. இதற்காக தனியார் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

.