முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது
- தமிழக முதல்வருக்கு கொரோனா சோதனையின்போது பாதிப்பு இல்லை என தகவல்
- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்
தமிழகத்தில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளார்கள். மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,487 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் ஏற்படும் பாதிப்புகளை வல்லுனர்களால் கூட கணிக்க முடியவில்லை.
கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் கூறினார். அவர் யதார்த்தமாக கூறியதில் என்ன தவறு இருக்கிறது? கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது.
இந்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.