This Article is From Jun 25, 2020

இதுவரையில்லாத உச்சம்! தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  மட்டும் தமிழக அளவில் மொத்தம் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,236 பேர் பாதிப்பு  குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில்லாத உச்சம்! தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த 24  மணி நேத்தில் 32 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரையில்லாத  அளவுக்கு ஒரே  நாளில் 3,509  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  மட்டும் தமிழக அளவில் மொத்தம் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,236 பேர் பாதிப்பு  குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய பாதிப்பால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24  மணி நேத்தில் 32 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக தற்போது 3 ஆயிரத்தை தாண்டி ஒரே நாளில் 3,509 ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 பேர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 694 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைப் போன்று குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2,236 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தம் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள், குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

.