This Article is From Jul 07, 2020

சென்னையில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 4545 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று தெரிவித்த தமிழக முதல்வர், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். 

சென்னையில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 4545 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த மற்ற மாவட்டங்களில் அதிகரிப்பு
  • சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
  • ஒரே நாளில் தமிழகத்தில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் கணிசமாக குறைந்து, மற்ற மாநிலங்களில்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இன்று ஒரே நாளில் மட்டும் 4,545 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 அக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் 1,203 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

சென்னையில் அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  தமிழகம் முழுவதும் கொரோனாவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று தெரிவித்த தமிழக முதல்வர், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். 

இதற்கிடையே மதுரையில்  அத்தியாவசிய பொருட்களை நீண்ட தூரம் சென்று வாங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

.