This Article is From May 04, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 3,550 ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 3,550 பேரில் 1,409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒருவர் உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

தற்போது மொத்தம் 2,107 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Highlights

  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்திருக்கிறது
  • கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 577 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்திருக்கிறது. 

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 527 பேரில் 377 பேர் ஆண்கள்; 150 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 12 ஆயிரத்து 773 பேருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில்தான் 527 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் மையங்கள் 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 அரசு ஆய்வகங்கள். மற்ற 14, தனியாருக்கு சொந்தமானவை.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 3,550 பேரில் 1,409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒருவர் உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது மொத்தம் 2,107 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

Advertisement

சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிடும் கொரோனா பற்றிய செய்திக்குறிப்பில் மாவட்ட வாரியாக தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இன்றைக்கு அதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழக பாதிப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement