This Article is From May 08, 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 391 பேருக்கு பாதிப்பு

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவை விடவும் தமிழகத்தில்தான் அதிக மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரைக்கும் 2,16,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 391 பேருக்கு பாதிப்பு

உயிரிழப்பு வீதம் 0.68 சதுவீதமாக இருக்கிறது. இது பெரும்பாலான நாடுகள், மாநிலங்களை விட மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
  • மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி விட்டது
  • சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

புதிய பாதிப்புகளால் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. 

மொத்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களில் இரு மடங்காக உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 405 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள் ஆவர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இன்றைக்கு சென்னையில் 2 பேர், நெல்லையில் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு வீதம் 0.68 சதுவீதமாக இருக்கிறது. இது பெரும்பாலான நாடுகள், மாநிலங்களை விட மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவை விடவும் தமிழகத்தில்தான் அதிக மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரைக்கும் 2,16,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். 

.