This Article is From Jun 26, 2020

75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் மாவட்ட வாரியாக விபரம் (26-06-2020)

பலியானவர்கள் மற்றும் சிகிச்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 32 ஆயிரத்து 305 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் மாவட்ட வாரியாக விபரம் (26-06-2020)

தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
  • தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது
  • தொடர்ந்து 2வது நாளாக தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3500யை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை நெருங்கி விட்டது.  சென்னையில்  இதுவரையில்லாத அளவுக்கு உச்சபட்ச பாதிப்பு  பதிவாகியுள்ளது. தமிழகத்திலும் இதுவரையில்லாத உச்சம்தான் இன்று எட்டப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,358 பேர் குணம்பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்கள் மற்றும் சிகிச்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 32 ஆயிரத்து 305 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டில் 232 பேருக்கும், மதுரையில் 190 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருவள்ளூரில் 177 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த விபரம் பின்வருமாறு-

மாவட்டம்

மொத்த பாதிப்பு

டிஸ்சார்ஜ்

சிகிச்சை பெறுவோர்

மரணம்

1

அரியலூர்

454

391

63

0

2

செங்கல்பட்டு

4,651

2,463

2,119

68

3

சென்னை

49,690

28,823

20,136

730

4

கோவை

393

176

215

1

5

கடலூர்

929

535

389

5

6

தர்மபுரி

53

19

34

0

7

திண்டுக்கல்

344

231

109

4

8

ஈரோடு

100

74

24

2

9

கள்ளக்குறிச்சி

527

325

201

1

10

காஞ்சிபுரம்

1,580

733

829

18

11

கன்னியாகுமரி

275

121

153

1

12

கரூர்

135

98

37

0

13

கிருஷ்ணகிரி

87

32

53

2

14

மதுரை

1,477

520

944

13

15

நாகை

209

82

127

0

16

நாமக்கல்

97

86

10

1

17

நீலகிரி

56

21

35

0

18

பெரம்பலூர்

165

147

18

0

19

புதுக்கோட்டை

112

40

70

2

20

ராமநாதபுரம்

546

162

380

4

21

ராணிப்பேட்டை

620

318

300

2

22

சேலம்

599

229

368

2

23

சிவகங்கை

130

71

58

1

24

தென்காசி

294

111

183

0

25

தஞ்சை

382

156

225

1

26

தேனி

477

143

332

2

27

திருப்பத்தூர்

100

44

56

0

28

திருவள்ளூர்

3,277

1,923

1,299

55

29

திருவண்ணாமலை

1,498

573

916

9

30

திருவாரூர்

295

131

164

0

31

தூத்துக்குடி

789

513

272

4

32

நெல்லை

710

490

215

5

33

திருப்பூர்

141

117

24

0

34

திருச்சி

493

234

255

4

35

வேலூர்

901

214

684

3

36

விழுப்புரம்

712

434

266

12

37

விருதுநகர்

314

158

152

4

38

சர்வதேச விமான நிலைய  கண்காணிப்பு

350

138

211

1

39

உள்நாட்டு விமான  நிலைய கண்காணிப்பு

258

72

186

0

40

ரயில்வே கண்காணிப்பு

402

209

193

0

மொத்தம்

41,357

32,305

957

.